தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளிகளில் 13 வயது, அதற்கு மேற்பட்ட, பூப்படைந்த மாணவிகளைத் தேடும் தலிபான்கள்

கந்தகார் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள் தலிபான்கள்.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2022, 11:55 am


கந்தகார்: கந்தகார் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வரும் தலிபான்கள், அங்கு 13 வயது, அதற்கு மேற்பட்ட மற்றும் பூப்படைந்த மாணவிகள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 லட்சம் பெண்களுடன் இவர்களும் சேர்ந்துகொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, 13 வயதுடைய சிறுமிகள், அதற்கு மேற்பட்ட பெண்கள், பூப்படைந்தவர்கள், 6வது பயிலும் பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பெண் கல்வியை தடுப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு கண்டங்களை தலிபான்கள் எதிர்கொண்டு வந்தாலும் தங்களது முடிவிலிருந்து அவர்கள் பின்வாங்குவதாக இல்லை.

இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி, பூப்படைந்த பெண்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து படிக்கக் கூடாது. தற்போது ஆப்கானிஸ்தானில் போதுமான ஆசிரியைகள் இல்லாததால், பெண்களை கல்வி பயில அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

தலிபான்கள் பதவியேற்பதற்கு முன்னதாகவே, பல இருபாலர் பள்ளிகளிலிருந்து பெண்கள் பள்ளிகள் தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன.  பெண் கல்வியில், தலிபான்கள் யாருக்குமே சலுகைகள் அளிக்கவும் தயாராக இல்லை.

கந்தகாரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தன்னைப் போல சுமார் 100 சிறுமிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அவர் கவலையுடன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.