காத்மாண்டு: வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாளம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின.
நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு, இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பு, பாகிஸ்தானிலிருந்து வந்ததும், அது வெறும் புரளி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
நேபாள விமான நிலைய அதிகாரிகளுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலையத்தின் உள்ளூர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்விடுக்கப்பட்டது.
உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கைத் தகவல் கொடுக்கப்பட்டு மர்ம பொருளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அழைப்பு விடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


