திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 4ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

News image

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு (கோப்பிலிருந்து)

Updated On :25 ஜூலை 2022, 12:47 pm


கொழும்பு: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 4ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எரிபொருள்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கையிருப்பை ஆராய்ந்து, மாணவர்களுக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுமார் ஒரு மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.