பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 76,855 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 15,970,949 பேருக்குத் தொற்று பரவியுள்ளது.
மேலும், ஒரேநாளில் 2,215 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 4,46,309 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கரோனா இறப்புகளை பிரேசில் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டில் கரோனாவின் புதிய அலை அனுபவித்து வருகிறது. இதன் விளைவாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்துள்ளன.
பிரேசிலில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


