டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நேபாளம் சர்வதேச விமானத் தடை மே இறுதி வரை நீட்டிப்பு 

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே இறுதி வரை நீட்டிக்க நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. 

News image

நேபாளம் சர்வதேச விமானத் தடை மே இறுதி வரை நீட்டிப்பு 

Updated On :12 மே 2021, 7:44 am

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே இறுதி வரை நீட்டிக்க நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. 

மே மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு வரை விமானத் தடையை நீட்டிப்பதாக இமயமலை விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே மே 14-ஆம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 நாள்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய முன்பதிவுகளைத் திறக்கவேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவ மற்றும் சரக்கு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விமானத் தடை நீட்டிக்கப்படுவதால், தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்புபவர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.