மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இத்தாலியில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

News image
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடிப் போன இத்தாலியின் வெனிஸ் நகரின் புனித பீட்டா் சதுக்கத்தில் உள்ள திறந்தவெளி உணவகம்.
Updated On :27 ஜனவரி 2024, 4:10 pm

ENS


ரோம்: இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இத்தாலியில் ஒரே நாளில் 196 பேர் மரணம் அடைந்தனர்.

புதன்கிழமையன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக இருந்த நிலையில், நேற்று இது 2,651 ஆக உயர்ந்தது. இதனால், இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.