மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது இத்தாலி

இத்தாலியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வேலை மற்றும் உடல்நலன் பிரச்னைகளைத் தவிர்த்து வேறு எந்தக் காரணத்துக்காகவும் பொதுமக்கள்  பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Coronavirus
Updated On :27 ஜனவரி 2024, 4:08 pm

ENS


இத்தாலியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வேலை மற்றும் உடல்நலன் பிரச்னைகளைத் தவிர்த்து வேறு எந்தக் காரணத்துக்காகவும் பொதுமக்கள்  பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை அந்நாட்டில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 9,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கரோனா பாதிப்பு மிகுந்த பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை உத்தரவு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுவிடங்களில் கூடுவது மற்றும் பொதுவிடங்களை திறந்து வைப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை மற்றும் உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம். அதே சமயம், எங்கிருந்தாலும் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

இத்தாலியில் பள்ளி மற்றும் பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுளள்து. 

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், உணவகங்கள், மதுபானக் கூடங்களை மாலை 6 மணிக்குள் மூடிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று வாரங்களுக்கு திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.