/

அமெரிக்காவில் தொடர்ந்து 2-வது நாளாக 70 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதிப்பு

அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 70 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

News image

US coronavirus cases update

Updated On :18 ஜூலை 2020, 7:32 am

அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 70 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள  நாடாக அமெரிக்கா விளங்குகிறது. தினமும் பாதிப்பும், பலியும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் அமெரிக்க மக்களை அச்சுறுத்தி வருகிறது கரோனா. 

வியாழக்கிழமை ஒரே நாளில் 77 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 70 ஆயிரம் பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சனிக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில், அந்த நோயால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 37,70,012 ஆகவும், பலி எண்ணிக்கை 1,42,064 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.