பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 20,286 பேருக்கு கரோனா: 733 பேர் பலி
பிரேசிலில் ஒரே நாளில் 20,286 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பிரேசிலில் ஒரே நாளில் 20,286 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,88,4,967 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 733 பேர் புதிதாக இறந்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 72,833 ஆக உள்ளது.
தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து பிரேசிலில் கரோனா பாதிப்பிலிருந்து 1,213,512 மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவலின்படி, கரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1,35,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...