திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஆப்கனில் குண்டுவெடிப்பு: நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் உள்பட 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

7 killed in Afghan bomb blasts

Updated On :21 டிசம்பர் 2020, 7:55 am

ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பர்வான் மாகாணத்தில், சாரிகர் நகரில் மாகாண நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் வாலி முகமது உள்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளின் வாகனத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக  மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், பாத்கீஸ் மாகாணத்தில், முகூர் மாவட்டத்தில் ஒரு சரக்கு லாரி மீது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். 

இந்த சாலையோர குண்டுவெடிப்பு சம்பவங்களை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 37 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 510 குண்டுவெடிப்புகளில் கிட்டத்தட்ட 500 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,050க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் வெளியிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டத்தின் (யுனாமா) அறிக்கையின்படி, இந்தாண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 2,117 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3,822 பேர் காயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.