அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனாவின் அடுத்த மையமாக ஆப்பிரிக்கா இருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு

கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்காவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த நாடு கரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 10:15 am

ஜெனீவா: கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த நாடு கரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்கா முழுவதும் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைக்கு இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைக் காட்டிலும் குறைவுதான்.

உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான இயக்குநர் மட்ஷிடிசோ மொய்டி இது பற்றி கூறுகையில், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவெரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகியவற்றின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதில் மிகத் தீவிரம் காட்டுவதாகவும், ஏன் என்றால், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அங்கு மருத்துவ வசதிகள் இல்லை. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் ஆப்பிரிக்க நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதிக நோயாளிகளை அனுமதிக்கவோ, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ உபகரணங்களோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு தற்போது சந்தித்திருக்கும் மிகப்பெரிய சவால் வென்டிலேட்டர் வசதி. மேலும், மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த பகுதிகளில் கரோனா பரவி வருகிறது. இங்கு சமூக இடைவெளியைப் பயன்படுத்துவதோ, தூய்மையைப் பேணுவதோ சவாலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.