இஸ்லாமாபாத்: மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.
பாகிஸ்தானில் வசித்து வரும் கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீபி, முஸ்லிம் மதத்தை அவமதித்ததாக, கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உறுதி செய்தது.
மரண தண்டனைக்கு எதிராக, பீபியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து ஆசியா பீபியை விடுவித்து கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முகமது சலாம் என்பவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிப் சயீது கோசா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் 'சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே ஆசியா பீபி விடுவிக்கப்பட்டார். சாட்சியங்களில் தவறு நிகழ்ந்திருந்தால், தீர்ப்பை மறுஆய்வு செய்ய பரிசீலனை செய்யப்படும். மதத்துக்கும் தீர்ப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது? குற்றமற்றவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் மதம் கூறுகிறதா?'' என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.
இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் வழக்கறிஞரான சைப் உல் மலூக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆசியா பீபீ செவ்வாய் இரவு கண்டா சென்று சேர்ந்தார். பாகிஸ்தான் அரசாங்கமானது அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்த பிறகு, அவர் தனது கணவருடன் செவ்வாய் அன்று புறப்பட்டார். அவர் வெளியேற அனுமதிக்கப்படுவது பல்வேறு அரசாங்க நடைமுறைகளின் காரணமாக தாமதமானாலும், இறுதியாக அவர் பாதுகாப்பாக வெளியேறி விட்டார். இறைவனுக்கு நன்றி!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


