லாகூர்: ஊழல் வழக்கில் வழங்கப்பட்டிருந்த பிணைக்காலம் முடிந்ததை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது. 2017-ஆம் ஆண்டு வெளியான 'பனாமா ஆவணங்கள்' விவகாரம் தொடர்பாக, ஊழல் மற்றும் முறைகேடாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கொன்றில், அவருக்கு 2018-ஆம் ஆண்டு இறுதியில் ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் அவர் லாகூரின் கோட் லஹ்பாட் சிறையிலிருந்து வருகிறார்.
அப்போது கடந்த மார்ச் 26-ஆம் தேதி உடல் நலக் குறைபாட்டைக் காரணம் காட்டி நவாஸ் ஷெரீப் ஆறு வார காலம் பிணை கேட்டிருந்தார். அதன்படி விடுவிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது பிணைக்காலத்தினை மேலும் நீட்டிக்க கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவினை நீதிமன்றம் நிராகரித் து விட்டது.
இந்நிலையில் பிணைக்காலம் முடிந்ததை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.
தற்போது இஸ்லாமியர்களின் புனித காலமான ரம்ஜான் நோன்புக் காலம் நடைபெற்று வருவதால், நோன்புத் திறப்பு நிகழ்வு முடிந்த பின்னர் அவர் சிறைக்குத் திரும்புவார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகமானது நவாஸ் ஷெரீப் செவ்வாய் மாலை 5 மணிக்கு சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


