மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சமுக வலைத்தளங்களில் வைரலான கட்டுமானத் தொழிலாளரின் புகைப்படம்

கேமராவை உற்று நோக்கும் வங்கதேச கட்டுமானத் தொழிலாளரின் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2019, 10:29 am

டாக்கா: கேமராவை உற்று நோக்கும் வங்கதேச கட்டுமானத் தொழிலாளரின் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அபெதின்மங். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த 21-ஆம் தேதி பச்சைக் கண்களுடன் கேமராவை உற்று நோக்கும் சிற்பம் போல் அமைந்த இளைஞர் ஒருவரின் புகைப்படமொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தாவது:

இந்தப் புகைப்படமானது கோலாலம்பூரில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர். அவர் மிகவும் வெட்கப்பட்டார். படத்தை எடுத்தது அலைபேசி என்பதால் அவருக்கு எங்கு பார்ப்பது என்றே தெரியவில்லை. நான் அவருக்கு கேமராவைப் பலமுறை சுட்டிக் காட்டினேன். நிறைய ஷாட்டுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை நன்றாக இல்லை. கடைசியாக அவர் கேமராவை நேருக்கு நேராக பார்த்த போது இது எடுக்கப்பட்டது. நன்றாக இருக்கிறது இல்லையா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படமானது இதுவரை 24,500 பேரால் ரீ ட்வீட் செய்யப்பட்டிருப்பதுடன், 68,700 பேர் லைக் செய்துள்ளார்கள்.  இதனால் இது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தத் தகவலை வங்கதேசத்திலிருந்து வெளிவரும் 'டெய்லி ஸ்டார் பங்களாதேஷ்' செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.