கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு? ராய்டர்ஸ் தகவல்

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:43 am

ANI


இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

எனினும், இதனை முஸ்லிம் அமைப்பு ஒன்று நிகழ்த்தியிருக்கலாம் என்று இலங்கை அரசு குற்றம்சாட்டி வந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு  பொறுப்பேற்றிருப்பதாக அமக் என்ற செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமக் என்பது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித்தளமாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.