ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பெட்டிகளில்.. பிளாஸ்டிக் பைகளில்.. 12 குழந்தைகளின் பிணங்கள்: அதிர வைத்த கென்ய மருத்துவமனை 

கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகர மருத்துவமனை ஒன்றில்  பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 12 குழந்தைகளின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2018, 11:15 am

நைரோபி: கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகர மருத்துவமனை ஒன்றில்  பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 12 குழந்தைகளின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கென்ய நாட்டின் தலைநகரான நைரோபியில் பும்வானி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தொடர்ந்து அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், நோயாளிகள் அலட்சியத்துடன் நடத்தப்படுவதாகவும் மற்றும் குழந்தை மரணங்கள் சம்பவிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தன. 

இதனால் நைரோபி மாகாண ஆளுநர் மைக் சொங்கோ திங்களன்று அந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.  அப்போது மருத்துவமனை அறை ஓன்றில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை திறக்கச் சொன்ன போது, அதில் 12 குழந்தைகளின் பிணங்கள் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். 

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சொங்கோ, குழந்தைகளின் மரணங்கள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர், தலைமை நிர்வாகி மற்றும் அன்று பணியில் இருந்த மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கென்யா நாடாளுமன்ற உறுப்பினர் ஜான்சன் சகஜா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.