சான் பிரான்சிஸ்கோ: 2016ம் ஆண்டு முதல் பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கும் கூகுள் நிறுவனம் 13 மூத்த மேலாளர்கள் உட்பட 48 பேரை இந்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி சுந்தர் பிச்சை இது குறித்து கூகுள் ஊழியர்களுக்கு வெளியிட்டிருக்கும் கடிதம் தொடர்பான செய்தி பிபிசி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில், தவறான நடத்தையுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் கூகுள் நிறுவனம் மிகக் கடினமான முறையையே இதுவரை கையாண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பாலியல் புகாரையும் மிகக் கவனமாக கையாண்டு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் புகார் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட எந்த ஊழியருக்கும் கடந்த 2 ஆண்டுகளில் எந்த பணிக்கொடையும் வழங்கப்படவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஆன்டிராய்ட் போன் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த ஆன்டி ரூபின், பாலியல் புகார் தொடர்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது.
பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்த கூகுள் நிறுவனம், புகாரில் உண்மை இருப்பதை அறிந்து கொண்டதாகவும், இதனை மறுத்த ஆன்டி ரூபின், தாமாகவே பணியை விட்டு விலகுவதாக அறிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை கூகுள் உறுதி செய்யவில்லை.
அப்போது ஆன்டி ரூபினுக்கு 90 மில்லியன் டாலர் பணிக்கொடையாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரூபினின் செய்தித் தொடர்பாளர் சாம் சிங்கர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



