வெல்லிங்டன்: என்ன காரணம் என்று தெரியாமல் நியூசிலாந்து கடற்கரையில் 51 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகததின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உள்ளூர் நேரப்பபடி வியாழன் மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தின் ஓவெங்கா மாகாணத்தில் உள்ள ஹன்சன் வளைகுடாப் பகுதியில் 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக தகவல் வந்தது.
அவற்றில் 30 முதல் 40 வரையிலான திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் சென்று விட்டன. ஆனால் மீதமுள்ள 50 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கி விட்டன.
கடந்த வாரம் கூட நியூசிலாந்தின் ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் வகை திமிங்கிலங்கள் இதேபோலவே இறந்து கரை ஒதுங்கின என்பதுகுறிப்பிடத்தக்கது.
திமிங்கிலங்களின் இறப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியாவிட்டாலும், ஏதேனும் நோய், பாதை குழப்பம், நிலவியல் சார்ந்த காரணங்கள், வேகமாக வீழும் அலை, ஏதேனும் எதிரிகளால் துரத்தப்படுதல் அல்லது மோசமான காலநிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


