கலிபோர்னியா: கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.
பிரபல தேடுபொறி தளமான கூகுளின் சார்பாக இயங்கி வரும் சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். பேஸ்புக்கிற்கு போட்டியாக துவங்கப்பட்டாலும் இது அத்தனை புகழ்பெறவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் ஒரு கணினிப் பிழையின் காரணமாக கூகுள் பிளஸ் பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் அந்தரங்கத் தகவல்கள திருடப்பட்டது தெரிய வந்தது. அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக இந்த திருட்டு நடந்து வந்திருப்பது அதிர்ச்சியளித்தது.
இதன் காரணமாக அடுத்தவருடம் ஆகட்ஸ் மாத்ததுடன் கூகுள் பிளஸ் சேவை நிறுத்தபப்படுவதாக அக்டோபர் மாதமே கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது
இந்நிலையில் கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் ஒரு கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அமபலத்திற்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக 'வயர்ட்' இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:
கூகுள் தளமானது கூகுள் பிளஸ்சில் கடந்த மாதம் மீண்டும் ஒரு 'பக்' இருப்பதைக் கண்டறிந்தது. உடனடியாக செயல்பட்டு அந்த பிழை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் தவறாக கையாளப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆனால் இந்த பக்கின் மூலம் பயனாளர்கள் ஐந்து கோடியே இருபத்தைந்து லட்சம் பேரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அந்தரங்க ப்ரொபைல்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்பயன்பாட்டிற்கு எளிதாக கிடைத்துள்ளது என்பது தெரிய வநதுள்ளது
இதன்காரணமாக கூகுள் பிளஸ் சேவை அறிவிக்கப்பட்டதற்கு சற்று முன்னதாக வரும் ஏப்ரல் மாத்ததுடன் நிறுத்தபப்டுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


