சான் பிரான்சிஸ்கோ: கூகுளின் 'ஆப்'களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவில் கூகுளின் ஆண்டிராய்ட் இயங்கு செயலி (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) பயன்படுத்தப்படுகிறது. அதில் கூகுள் மேப் உள்ளிட்ட பல்வேறு ஆப்கள் பயனாளர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது. இவை அனைத்தும் இருப்பிட தகவல் சேவை (லொகேஷன் டேட்டா / ஹிஸ்டரி) என்னும் சேவையின் வழி ஒழுங்கு செய்யப்படுகிறது. பொதுவாக இந்த சேவையை அணைத்து (ஆஃப்) வைத்து விட்டால் பயனாளர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படாது என்று கூகுள் உதவித் தகவல் (ஹெல்ப்) பக்கத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூகுளின் 'ஆப்'களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது கூகுள் உதவித் தகவல் (ஹெல்ப்) பக்கத்தில், இருப்பிட தகவல் சேவை (லொகேஷன் டேட்டா / ஹிஸ்டரி) என்னும் சேவை தொடர்பான விளக்கமானது கீழ்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது:
‘இந்த சேவையில் செய்யபப்டும் மாற்றமானது உங்கள் போனில் உள்ள கூகுள் லொகேஷன் சர்வீஸ் மற்றும் பைண்ட் மை போன் உள்ளிட்ட இதர இருப்பிட தகவல் சேவைகளை பாதிக்காது.
கூகுள் மேப்ஸ் மற்றும் தேடுதல் வசதிகளுக்காக உங்கள் இருப்பிடம் தொடர்பான சில தகவல்கள் சேகரிக்கப்படலாம்.’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசும் பொழுது, "பயனாளர்களின் கூகுள் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், கூகுள் உதவி தொடர்பாக கூடுதல் விளக்கமளிக்கவுமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


