ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் வெர்னெ ட்ராயர் உடல் நலக் குறைவால் நேற்று (ஏப்ரல் 21) திடீரென மரணம் அடைந்தார். வெர்னெ ட்ராயர் (Verne Troyer) 1994-ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச புகழ்ப் பெற்ற படமான ‘பேபிஸ் டே அவுட்’ திரைப்படத்தில் குழந்தையாக நடிக்கத் தொடங்கி அதன் பின் கடந்த 24 வருடங்களாக ஹாலிவுட்டில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

81 செண்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்ட வெர்னே ட்ராயர் உலகின் மிகக் குள்ள மனிதராவார். 49 வயதாகும் அவரது உருவத்தின் அளவு தான் குறைவானதே தவிர அவருடைய புகழின் அளவு மிக அதிகம் என்று வாழ்ந்து காட்டியவர் வெர்னெ ட்ராயர். ஹாரி பாட்டர் படத்தில் நடித்தபின் உலகின் மூலை முடுக்கெல்லாம் மிகவும் பிரபலமானார். அப்படத்தில் காப்ளின் க்ரிப்ஹுக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர்.

வெர்னெ ட்ராயர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த செய்தியறிந்த ஹாலிவுட் நடிகர்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சில விஷமிகள் அவரது உருவம் குறித்து கிண்டலாக சில பதிவுகள் போட்டதை கண்டனம் தெரிவித்து பலரும் அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். ஒரு மனிதர் எப்படி இருந்தால் என்பதைவிட எப்படி வாழ்ந்தார் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அவ்வகையில் வெர்னே ட்ராயர் நல்ல நடிகராக, நகைச்சுவை உணர்வு மிக்கவராக திகழ்ந்தார். மேலும் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் பாசிட்டிவ் எண்ணங்கள் உடையவராகவும் அவர் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

மாவட்டம் வாரியாக வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


