பெர்லின்: திரைப்பட விழா ஒன்றில் புகழ்பெற்ற நடிகர் ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய ஒருவர் விருது பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜெர்மனியில் நடைபெறும் கோல்டன் கேமரா என்னும் திரைப்பட விழா மிகவும்ப புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் "லா லா லேண்ட்" என்னும் திரைப்படம் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.இந்த விழாவில்தான் அந்த திரைப்படத்தின் கதாநாயகனும்,புகழ்பெற்ற நடிகருமான ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய ஒருவர் விருது பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து இந்த நிகழ்வுக்கு தொகுப்பாளராக பணிபுரிந்த ஸ்டீவன் கேட்டின் வெரைட்டி.காம் என்னும் இணையதளத்திற்கு அளித்த பேட்டி விபரம் வருமாறு:
சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட அந்தப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட யாரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியயாத நிலை. எனவே நகைச்சுவைக்காக இப்படி ஒரு செயலை செய்யலாம் என்று திட்டமிட்டோம். இதற்காக ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய லுட்விக் லென்னரை அணுகினோம். இவர் இத்தாலிய நகரமான முனிச்சில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
நிகழ்வில் சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டவுடன், 'படத்தின் இயக்குனர் கலந்து கொள்ள முடியாத நிலையில் இவர் கலந்துகொண்டு விருதுபெறுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர்தான் இந்த படத்தின் கதாநாயகன் ரியான் கோஸ்லிங்க' என்று அறிவித்தேன்.
உடனே மேடையில் தோன்றிய லுட்விக் நன்றி கூறி விருதினை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அரங்கத்தில் நிக்கோல் கிட்மேன், காலின் பெர்ரெல் மற்றும் ஜேன் போன்டா உள்ளிட்ட பிரபல நடிக நடிகையரும் இருந்தனர். அவர்கள் இதனை வியாபாபுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் விருது நிகழ்வு முடிந்தவுடன் நடந்த விஷயத்தைக் கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்.
இவ்வாறு ஸ்டீவன் கேட்டின் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


