லண்டன்: உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள இங்கிலாந்து பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்தின் ஆளும்கட்சியாக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமராக இருப்பவர் தெரேசா மே. ஐரோப்பிய யூனியனின் இருந்து இங்கிலாந்து வெளியேறும் 'பிரெக்சிட்' முடிவை அதிகார்ப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்த கையோடு, பொதுத் தேர்தல் முன்னதாகவே நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியான லேபர் கட்சி பிரதமர் வேட்பாளர் கார்பின், பிரதமர் தெரேசா மேக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடுமையான பிரச்சாரங்களுக்குப் பிறகு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உள்ளூர் நேரப்பபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக நாடு முழுவதும் 40000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தெடுக்கும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு, 4.69 கோடி மக்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சிலர் முன்பே தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்து விட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கி விடும். நள்ளிரவு நேரத்தில் பெரும்பாண்மை நிலவரங்கள் தெரியத் துவங்கும். நாளை மதியம் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விடும்.
பெரும்பாண்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 650 இடங்களில், ஒரு கட்சியானது 326 இடங்களை வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


