லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த சாரா ஜேன் என்ற 35 வயதுப்பெண் தன்னுடைய பிரசவத்தை சமூக வலைத்தளமான 'பேஸ்புக் லைவ்' வீடியோ வழியாக பகிர்ந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன் ஜங்ஸ்ட்ரம் (35). தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக இருக்கும் இவர், சமீபத்தில் தன்னுடைய வீட்டில் பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தொடங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் வரையிலான சம்பவங்களை, பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள 'லைவ் வீடியோ' வசதி வழியாக ஐந்து வீடீயோக்களாக பகிர்ந்துள்ளார். அவரின் இந்த வீடீயோக்களை பேஸ்புக் வழியாக இரண்டு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சாரா, 'நான் கடந்த வருடம் முழுவதும் தாய்மை மற்றும் பிரசவம் குறித்து வீடீயோ வலைப்பதிவுகளை வெளியிட்டு வந்தேன். எனவே இந்த லைவ் வீடீயோக்களை வெளியிடுவது என்பது இயல்பானதுதான்.என்னைப் பொறுத்தவரை ஒரு தாயாக இருப்பது என்பது மிகவும் மதிப்புக்குரிய ஒருவிஷயமாக கருதுகிறேன்.' என்று தெரிவித்தார்.
பின்னர் சாரா தனது பெண் குழந்தைக்கு ஈவ்லின் என்று பெயரிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


