பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கேலக்சி ஸ்மார்ட்போன் விவகாரம்: மன்னிப்பு விளம்பரம் வெளியிடும் சாம்சங்!

உலகளாவிய சந்தையில் இருந்து கேலக்சி 7 ஸ்மார்ட்போன்  திரும்ப பெறப்பட்ட விவகாரத்தில், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்  கோரும் விளம்பரம் ஒன்றை சாம்சங்  நிறுவனம் வெளியிட இருக்கிறது.     

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:15 pm

கவியோகி வேதம்

உலகளாவிய சந்தையில் இருந்து கேலக்சி 7 ஸ்மார்ட்போன்  திரும்ப பெறப்பட்ட விவகாரத்தில், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்  கோரும் விளம்பரம் ஒன்றை சாம்சங்  நிறுவனம் வெளியிட இருக்கிறது.     

ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் விளங்குவது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்சி 7 ஸ்மார்ட்போன், பேட்டரி பிரச்சினை காரணமாக வெடித்து சிதறுவது வாடிக்கையானது.ஏறக்குறைய 35 சம்பவங்கள் இதுபோல் உலகெங்கும் நிகழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த வகை ஸ்மார்ட்போன்களை சந்தையில் இருந்து திரும்ப பெறுவதாக சாம்சங் நிறுவனம், கடந்த 2-ஆம் தேதி அன்று அறிவித்தது. போனை வாங்கிய அனைவருக்கும் புதிய போன்கள் மாற்றி அ ளிக்கப்படும் என்றும் அது தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்நிறுவனம் இன்று வெளிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,   கேலக்சி 7 ஸ்மார்ட்போன்களைத் திரும்ப பெற்ற  நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களுக்கு உண்டான சிரமத்தை கவனத்தில் கொண்டு, அவர்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் விளம்பரம் ஒன்று ஊடகங்களில் வெளியிடப்பபடுமென்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.