பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

நியூஸிலாந்து மின்சாதனக் கடைக்குள் கோடாரியுடன் நுழைந்த கொள்ளையரை தடுத்த இந்திய வம்சாவளிச் சிறுமி!

நியூஸிலாந்தில் மின்சாதனக் கடைக்குள் கோடாரியுடன் நுழைந்து கடை ஊழியரைத் தாக்கிய கொள்ளையரைத்

News image
Updated On :8 செப்டம்பர் 2016, 9:27 am

மெல்போர்ன்: நியூஸிலாந்தில் மின்சாதனக் கடைக்குள் கோடாரியுடன் நுழைந்து கடை ஊழியரைத் தாக்கிய கொள்ளையரைத் தடுத்த இந்திய வம்சாவளிச் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
நியூஸிலாந்தின் ஆக்லாண்ட் நகரில் சுஹைல் படேல் என்பவர் மின்சாதனக் கடை நடத்தி வருகிறார்.
அந்தக் கடைக்குள் கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கடந்த திங்கள்கிழமை நுழைந்தது.
கடை ஊழியரை கிழே தள்ளிய கொள்ளையர் ஒருவர், அந்த ஊழியரை கோடாரியால் தாக்க முயன்றார்.
அப்போது அந்தக் கடையிலிருந்து தப்பியோடிக் கொண்டிருந்த உரிமையாளர் சுஹைல் படேலின் 6 வயது மகளான சாரா படேல் அந்தக் காட்சியைப் பார்த்தார்.
உடனடியாக சிறிதும் யோசிக்காமல் கொள்ளையரை நோக்கி ஓடிய அந்தச் சிறுமி, ஊழியரைத் தாக்க வேண்டாம் என்பது போல கொள்ளையர் மீது கைவைத்துவிட்டு, பிறகு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவியது.
ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக, 6 வயது சிறுமி ஆயுதத்துடன் இருந்த கொள்ளையரை துணிச்சலாகத் தடுத்த சம்பவம் நியூஸிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாட்டின் மிகத் துணிச்சலான பெண் என்று சாரா படேலை பலரும் பாராட்டி வருகின்றனர் என்று நியூஸிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சாராவின் தந்தை சுஹைல் படேல் கூறுகையில், ""எனது மகள் பிறருக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். கொள்ளையரிடமிருந்து ஊழியரைக் காப்பாற்ற முயன்றதன் மூலம் அவள் எங்களைப் பெருமையடையச் செய்துள்ளாள்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.