கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஜப்பான் முதியவர் கின்னஸ் சாதனை

ஜப்பான் நாட்டில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:25 pm

PTI

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் 96  வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா கடந்த ஆண்டு 'செராமிக்' பிரிவில் தனது இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இதற்கான பட்டம் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உலகிலேயே மிக அதிகமான வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதற்கான கின்னஸ் விருது ஹிராடாவுக்கு நேற்று வழங்கப்பட்டதாக, ஜப்பான் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விருது குறித்து கருத்து தெரிவித்த ஹிராடா, 100 வயது வரை வாழ்வதே லட்சியம். உடல் தகுதி இருக்கும்பட்சத்தில் முதுநிலை பட்டம் பெறுவதற்காக கல்லூரிக்கு செல்வேன் என்றார்.

இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் விமானப்படையில் பணியாற்றிய ஹிராடாவுக்கு 4 கொள்ளு பிள்ளைகள் உள்ளன.

ஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் ஜப்பானில் வசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.