தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இலங்கை அதிபருடன் சுஷ்மா சந்திப்பு: தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறீசேனாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறீசேனாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இலங்கை அதிபருடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, பல நூற்றாண்டு காலமாக நீடிக்கும் நாகரீகமான நட்புறவை அதிபர் சிறீசேனா நினைவு கூர்ந்தார் என்றும் சின்ஹா கூறினார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களும், இந்தியா - இலங்கை இடையே செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், நேற்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டம் குறித்தும் கலந்தாலோசனை செய்தனர்.

இந்தியாவால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் திருப்தியளிப்பதாக அந்நாட்டு அதிபர் பாராட்டியதோடு, அதற்காக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.