தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரான்ஸில் இஸ்லாமிய தொழுகைக் கூடம் மீது தாக்குதல்

பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2015, 10:28 am

பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

கார்ஸிகா தீவின் தலைநகரம் அஜாக்கியோவில், தீயணைப்புப் படையினர் மீது ஒரு கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தியது.

அந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆதரவாகவும் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இஸ்லாமியத் தொழுகைக் கூடத்தின் கதவை உடைத்து, அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து, நகரிலுள்ள பிற இஸ்லாமியத் தொழுகைக் கூடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். தீயணைப்புப் படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது. அதற்குப் பதிலடியாக, வழிபாட்டுக் கூடம் அடித்து நொறுக்கப்பட்டதும் ஏற்கத் தக்கதல்ல என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.