தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத்த காட்டுத் தீ: 100க்கும் அதிகமான சுற்றுலா விடுதிகள் சேதம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயால் 100க்கும் அதிகமான சுற்றுலா வீடுகள் எரிந்து நாசமாயின.

News image
Updated On :26 டிசம்பர் 2015, 9:20 am

தெற்கு ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயால் 100க்கும் அதிகமான சுற்றுலா வீடுகள் எரிந்து  நாசமாயின. எனினும், இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

வே ரிவர், செப்ரேஷன் கீரிக் ஆகிய இரு சுற்றுலா நகரங்கள் மெல்போரின் நகரின் தென்மேற்கே அமைந்துள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்ககாக ஏராளமானோர் இங்கு நேற்று வந்திருந்தனர்.

கடற்கரை ஓரமிருந்த காட்டிலிருந்து பரவிய தீ, இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கும் பரவியது. தீ வேகமாக பரவியதால் வே ரிவர், செப்ரேஷன் கீரிக் ஆகிய நகரங்களில் இருந்த 116 சுற்றுலா வீடுகள் தீக்கிரையாயின.

தீ வேகமாகவும், கடுமையாகவும் இருந்தது என விக்டோரியா மாகானத்தின் பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார். எனினும், இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஆண்ட்ரூஸ், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 173 பேர் இறந்து போனதை நினைவுகூர்ந்தார்.

500க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலிருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டமானது வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெளிவாக தெரிந்தது.

கடந்த 19 ஆம் தேதி கடற்கரை நகரான லோர்னே அருகே மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ ஏற்பட்டது. வெயில் அதிகமாக இருந்ததால் தீ அருகிலிருந்த நகரங்களுக்கும் பரவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.