வாடிப்பட்டியைச் சேர்ந்த துறவி சொக்கையா பண்டார சுவாமிகள், தனது குருவான கும்பகோணம் ஸ்ரீ மௌனசாமியின் வழியில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தினார். இவர் பல்வேறு ஊர்களில் திருமடங்களையும் கட்டினார். இவர்தான் தவம் செய்து வாழ்ந்த தர்மராஜன்கோட்டையில் உள்ள குன்றில் பாலதண்டாயுதபாணி கோயிலை பக்தர்கள் எளிமையாக ஏறி தரிசிக்கும் வகையில் 1921}ஆம் ஆண்டில் சிறப்புடன் கட்டினார்.
மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி சிலை அழகின் மொத்த அம்சம். கோயிலின் வரவேற்பு வளைவை அடுத்துள்ள தெப்பக்குளத்தைக் கடந்து விநாயகரை தரிசித்தப்படி கீழிருந்து கோயில் அமைப்பை பார்ப்பது பிரமாண்டமாகத் தெரியும். கோயில் சுவரில் சுதையினாலான மயில்கள் அமைந்துள்ளன . சொக்கையா பண்டார சுவாமிகளுக்கு முருகனுக்கு வலதுபுறமாக குன்றின் கீழே தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
குன்றின் கீழே இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கிறார். குன்றின் மேலே தண்டாயுதபாணி சந்நிதியின் சுற்றுப்பிரகாரத்தில் நவக் கிரக சந்நிதி அமைந்துள்ளது. குன்றின் மீது நாகர் சிலை உள்ளது.
"செவ்வாய்க்கிழமையில் இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்து, மனமுருகி வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் செய்தால் குழந்தை வரம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் விரிவு அடைந்திட வேண்டுபவர்களுக்கு வழிபட உகந்தது' என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கோயில் வளாகத்தில் இருக்கும் மரக் குச்சிகளை எடுத்து சுப நிகழ்ச்சிகளில் வைத்து வழிபடுகின்றனர். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் நட்சத்திர நாளன்று முருகனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.
இத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தேர்த் திருவிழா, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, பால் குடம், மயில் காவடி, அலகு குத்துதல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிவிமரிசையாக நடைபெறும் .
வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் , திண்டுக்கல் } மதுரை நெடுஞ்சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ளது.
- சோழவந்தான் ஜெனகராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெள்ளனூா் அழகுநாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்
கங்கை கொண்ட சோழீசுவரம்!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

