கந்த சஷ்டி விழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் 78-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்:
நவ. 17- ரிஷப வாகனம், நவ. 18- சூரசம்ஹாரம், 19- தெய்வானை திருமணம், வெள்ளி மயில் வாகனம், நவ. 20- வள்ளி திருமணம், புஷ்பப் பல்லக்கு.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் விழா: நவ. 18- சூரசம்ஹாரம், 19-தெப்போற்சவம், திருக்கல்யாணம், 21- வள்ளி திருமணம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல் ஒலக்கூர் பசுமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் விழா: நவ. 17- கதம்ப அலங்காரம், நவ. 18- புஷ்பாபிஷேகம், 19- திருக்கல்யாணம்.
தெப்போற்சவம்
சென்னை குரோம்பேட்டை, நெமிலிச்சேரி கல்யாண சாஸ்தா சமாஜத்தினர் சார்பில், ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பா சமேத கல்யாண சாஸ்தாவுக்கு 2-ஆம் ஆண்டு தெப்போற்சவம் - கோவிலம்பாக்கம் ஸ்ரீசிவா விஷ்ணு கோயிலில் நவ. 17-ஆம் தேதி காலை 6 மணி. அன்று மாலை பம்மல் ஸ்ரீசத்சங்க வளாகத்தில் ஸ்ரீ சாஸ்தா கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத சொக்கலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நவ. 24-ஆம் தேதி காலை 9.15 மணி. யாக சாலை பூஜைகள் நவ. 23-இல் தொடங்குகின்றன.
சங்காபிஷேக தீர்த்தம் வழங்கல்
திருக்கடவூர் ஸ்ரீஅமிர்த கடேசுவரருக்கு நவ.20-இல் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் - தீர்த்தம் மறுநாள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் நவ. 21 மாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவை கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறும்.
அறிவோம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி கோயிலில் மூலவர் இரண்டு கரங்களுடன் குரங்காசனத்தில் அமர்ந்து, ஆழ்ந்த யோக நிலையில் இருக்கிறார். அவர் சந்திரன் சூடி, ஒரு புத்தகமும் ஏந்தி யோக மூர்த்தியாக காட்சி தருகிறார். திருக்கயிலாயத்தில் அம்பிகைக்கு இறைவன் உபதேசம் செய்தருளிய கோலம் "யோக குரு' என்று சிவ ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் குரு பகவானை வியாழக்கிழமைகளில் 5 நெய் தீபங்கள், மஞ்சள் வஸ்திரங்கள் சாற்றி, முல்லை, வில்வத் தழைகள் கொண்டு அர்ச்சித்தால் யோகம் பெறலாம் என்பது ஐதீகம்.
-சி.பன்னீர்செல்வன்,
செங்கல்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

