தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ.3 - நவ.9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வழக்குகளில் இருந்த அலைச்சல்கள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய உத்திகளை புகுத்துவார்கள். விவசாயிகள் கால்நடைகளின் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் சேவையில் பாராட்டை பெறுவார்கள். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.
பெண்மணிகள் பெற்றோருடன் இணக்கமாக பழகுவார்கள். மாணவமணிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
நல்லவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியை காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு வாராக் கடன்கள் வசூல் ஆகும். விவசாயிகளுக்கு வயல் வரப்பு பிரச்னைகளில் நல்ல முடிவு ஏற்படும்.
அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் உள்ளவர்களையும், நண்பர்களையும் நன்கு புரிந்து கொள்வீர்கள். செய்தொழிலில் சிக்கல்கள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய இலக்குகளை எட்டுவார்கள்.
விவசாயிகளுக்கு நண்பர்கள் உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்னைகள் குறையும். கலைத்துறையினர் வீண் வதந்திகளால் சரிவைக் காண்பீர்கள்.
பெண்மணிகள் உறவினர்களை மகிழ்ச்சியுடன் நடத்துவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்த வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வியாபாரிகள் கடையை சிறப்பாக சீரமைப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். பெண்மணிகள் குடும்பத்தில் சுப காரியங்களுக்கு ஏற்பாடு செய்வீர்கள். மாணவமணிகள் ஞாபக சக்தியை மேம்படுத்த அதிகாலை எழுந்து படிக்கவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
நெருங்கிய உறவினர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வீர்கள். பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். விவசாயிகளுக்கு, அரசு மானியம் குறித்த காலத்தில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடம் பாராட்டும்படி திறமையாக உழைப்பார்கள். கலைத்துறையினருக்கு அந்தஸ்து உயரும். பெண்மணிகள் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் நண்பர்களால் உதவிகளை பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வழக்குகள் வெற்றி பெறும். உடல் உபாதைகள் மறையும். வருமானம் படிப்படியாக உயரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகள் நீர்வரத்து பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை தடையின்றி நடத்துவீர்கள்.
கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். பெண்மணிகள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். நினைத்த காரியங்களை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அநாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் குடும்பப் பிரச்னைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். மாணவமணிகள் உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு விளைச்சலை பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினர் வெளியூர் பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
மாணவமணிகளின் வருங்காலக் கனவுகள் நிறைவேற அறிகுறிகள் தென்படும்.
சந்திராஷ்டமம் - நவ. 3.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். விவசாயிகளின் முயற்சிகள் தடைகளை மீறி வெற்றி பெறும். அரசியல்வாதிகள் ரகசிய திட்டங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்படுவீர்கள். பெண்மணிகள் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பீர்கள். மாணவமணிகள் உடல் நலம் பெற யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து வரவும்.
சந்திராஷ்டமம் - நவ. 4, 5, 6.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
இதுவரை நடக்குமா, நடக்காதா என்று இருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். பூர்விக சொத்து விஷயத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும் விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.
கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோர்}ஆசிரியர் பேச்சை மதித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - நவ. 7, 8.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் சாதுரியமாக சமாளிப்பீர்கள். வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் புதிய சந்தைகளில் லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகளால் சிறு தொல்லைகள் உருவாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து வருமானம் வந்து சேரும். பெண்மணிகள் கடினமான சூழ்நிலைகளிலும் தைரியத்தை இழக்க மாட்டீர்கள். மாணவமணிகள் சாதனைகளை செய்து காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவ. 9.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எடுத்த காரியங்களை தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் கடன் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பேச்சு வார்த்தைகளில் நாவடக்கம் தேவை.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து வருமானம் பெருகும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவினால் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


