புதிய முயற்சி தன்னம்பிக்கை அளிக்கும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.


இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் உயர்வை எட்டுவீர்கள். சிலர் வாகனங்களை வாங்குவார்கள். பழைய கசப்பான விஷயங்களை மறக்க முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் விருதுகளைப் பெறுவார்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள். மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - பிப். 14,15.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம், மனவளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய உயர்வை எட்டுவீர்கள். பொருளாதாரம் சீராகவே இருக்கும். கௌரவமும் அந்தஸ்தும் உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு புகழ் உயரும். வியாபாரிகள் கூட்டுத் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.
விவசாயிகள் விவசாயத்தை நவீனமயமாக்குவார்கள். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாகப் பழகுவார்கள்.
கலைத்துறையினர் திறமைகள் போற்றப்படும். பெண்கள் தங்களது பணியை விரைந்து முடிப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் - பிப்.16.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
கடின முயற்சி செய்து பலன்களைப் பெறுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் உண்டு. பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு.
சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியை கவனமாக மேற்கொள்ளவும்.
வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளுக்கு செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சர்ச்சைகளில் மாட்ட வேண்டாம்.
கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆதாயம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
அறிவும் துணிச்சலும் கூடும். உடன்பிறந்தோருக்கு ஆதரவு கிடைக்கும். புகழ் கூடும். பயணத்தில் கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்களுக்கு உடல் நலம் சிறிது பாதிக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் பேச்சை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள் கடன்களைத் திரும்ப அடைப்பார்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் நெருக்கம் காட்ட வேண்டாம்.
கலைத்துறையினரின் பொருளாதாரம் சற்று உயரும். பெண்கள் குழந்தைகள் பிறப்பால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் யோகா, பிராணாயாமத்தைக் கற்றுக் கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
திட்டமிட்ட பணிகளை முடித்து விடுவீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். தன்னம்பிக்கையும் பொறுப்பும் கூடும்.
பெற்றோருடன் இணக்கமான உறவுதொடரும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவிகளைப் பெறுவார்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தைத் திறம்பட நடத்துவார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவார்கள்.
அரசியல்வாதிகள் பயணங்களைத் தள்ளிப் போடவும். கலைத்துறையினருக்கு வாய்ப்பு கூடும். பெண்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் மறையும். அமைதியாக கடமைகளை ஆற்றுவீர்கள். குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் முயற்சிகளைச் சிறப்புற செய்வீர்கள்.
பெண்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கை கொடுக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வார்கள்.
கலைத்துறையினர் திறமைகளை வெளிக் கொணர்வீர்கள். பெண்களுக்கு கணவர் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
சிறப்பான திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவார்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும்.
மாணவர்கள் சிறிய முயற்சிகளே அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
மனக் கவலைகள் நீங்கி புத்துணர்வைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் தொடர்பான எண்ணம் ஈடேறும். மறைமுகத் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிப்பளு இருக்காது. வியாபாரிகள் அதிக லாபத்தைக் காண்பார்கள்.
விவசாயிகளுக்கு மகசூலில் அதிக லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்து செல்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் கணவரை புரிந்துகொள்வார்கள். மாணவர்கள் உடற்பயிற்சி களைச் செய்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
புதிய நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் நிம்மதி குறையாது. நெடுநாளைய கோரிக்கை நிறைவேறும். நம்பிக்கையும் பலமடையும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணம் மேற்கொள்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன்பணம் அளிப்பார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பார்கள். கலைத்துறையினரின் திறமை பளிச்சிடும். பெண்கள் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு முன்கோபம் வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள்.
விவசாயிகள் பழைய கடன்களை அடைப்பார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தினால் கவரப்படுவார்கள். பெண்களுக்கு கணவருடனான அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
சந்திராஷ்டமம்- பிப். 12,13.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரிடம் மனம்விட்டு பழகுவீர்கள்.
சமூகப் பணிகளிலும் பெயர், புகழ் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய இடங்களுக்கு வியாபாரத்தை விரிவு செய்வார்கள். விவசாயிகளுக்கு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.
அரசியல்வாதிகள் சூழ்நிலைகளை அறிந்து கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் விழாக்களில் பங்கேற்பார்கள்.
பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- பிப். 12,13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...