- குரு, புதன் - அமர்ந்த இடத்திலேயே வருமானம் கொடுக்கக் கூடியது. சனி, புதன் - ஓடியாடி உழைத்து வருமானம் ஈட்டக்கூடியது.
- சுப காரிய மொய் நோட்டும், சுப காரிய பத்திரிகையும் சேமிக்கப்பட வேண்டும்.
- கோயில் கும்பாபிஷேகப் பத்திரிகை என்பது காரணம் இல்லாமல் நம் வீட்டுக்கு வராது. கும்பாபிஷேக அழைப்பிதழ் வந்தால் நாம் கோயிலில் இருக்க வேண்டும் என்றே பொருள். அந்த அதிர்ஷ்டத்தை பலரும் நழுவ விட்டுவிடுவோம்.
- சூரிய பகவான் 7, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வளர்ச்சியை கொடுப்பவர்.
- கிரகங்கள் சாதகமாக இருந்தால் மனிதர்கள் மூலம் நமக்கு நன்மை நடக்கும்.
- கிரகப் பிரவேசம், கல்யாணம், வளைகாப்பு, காதணி, பெயர் சூட்டு விழாக்களுக்கான பத்திரிகை, தொழில் நிறுவனங்கள் திறப்பு விழா என ஒவ்வொன்றுக்கும் அழைப்பிதழ்கள் வருகின்றன. ஆனால், நிகழ்ச்சிகளுக்கு அன்பளிப்பு இல்லாமல் சென்று எப்படி கலந்து கொள்வது என்று எண்ண வேண்டாம். விழாவில் கலந்துகொண்டு சாப்பிடாமல் வந்து விடலாம்; விநாயகர் பார்த்துக் கொள்வார்.
- கிரகங்கள் முதலில் அதன் காரகங்கள் மூலம் தான் விஷயத்தைச் சொல்லும். அதன் பிறகுதான் மனிதர்கள் மூலம் விஷயத்தைச் சொல்லும்.
-செளமியா சுப்பிரமணியன்
- ஸ்பானிஷ்காரர்கள் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பன்று, கடிகாரம் இரவு 12 மணி அடிக்கத் தொடங்கியவுடன் திராட்சைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்குவர். 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டால் புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
- முக்கிமலை நஞ்சன்
முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலிலிலும் ஓர் அதிசயத்தை வைத்துள்ளனர். அவற்றுள் சில:
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் உற்சவர் தனியாக இல்லை; மூலவரே உற்சவர் ஆவார்.
- கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பம் ஒன்றில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது; ஆனால், ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி- சுக்ரீவன் இருக்கும் சிற்பம் தெரியும்.
- கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், சுவாமிக்கு "பஞ்சவர்ணேஸ்வரர்' என்று பெயர்.
- வேலூர் அருகே விரிஞ்சிபுரம் சிவன் கோயிலில் உள்ள தூணின் தென்புறம் நேரத்தைக் கணிக்க, அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறமுள்ள துவாரத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியில் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம்.
- சென்னையை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே நாகலாபுரம் கிராமத்தில் ஸ்ரீவேத நாராயணப் பெருமாள் தலையிலிருந்து இடுப்பு வரை மனித உருவம், கீழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு தானியங்கி வானூா்திகள் பறக்க தடை

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


