கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், திருக்குவளை தாலுகாவில் மாவூர் } சாட்டியக்குடி வழியில் தெற்குப்பனையூர் கிராமத்தில் உள்ள இரட்டை லிங்கங்கள் என்ற சிறப்புடன் திகழும் வரம் தரும் நாயகி சமேத ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமி, சிவப்பிரியா சமேத தான் தோன்றீஸ்வரர் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 11}ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9840053289.
ஸ்ரீ வேதவியாசர் ஜயந்தி
சேலம் சின்னத் திருப்பதியில் ஸ்ரீ பாலாதேவஸ்தானம் ஸ்ரீமஹா பெரியவா இல்லத்தில் ஸ்ரீவேதவியாசர் ஜெயந்தி ஜூலை 13}ஆம் தேதி சிறப்பு ஹோமம், சகஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை முதலிய வைபவங்களுடன் நடத்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா மூலம் ஏற்பாடு
ஆகியுள்ளது.
தொடர்புக்கு: 9442191793, 8838911220.
ஸ்ரீ வியாஸ பூர்ணிமா ரதோத்ஸவம்
சென்னை செம்பாக்கம் காமராஜபுரம் களத்து மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ வேதவ்யாஸர் தபோவனத்தில் ஜூலை 13}ஆம் தேதி வ்யாஸ பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ வேதவியாசர் சந்நிதியில் காலை 6 மணி அளவில் மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை வழிபாடும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 9444508247.
சுகபிரம்ம மகரிஷி ஜயந்தி
ஸ்ரீ வேதவியாசர் புத்திரனாக ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி. அவருடைய ஜெயந்தி விழா தென்னகத்தில் மூன்று இடங்களிலும் ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு ஹோமம், பூஜைகள், அபிஷேகம் அலங்கார ஆராதனைகளுடன் ஸ்ரீ குமார் குருஜியின் அனுக்கிரகத்தால் நடைபெறுகிறது.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி ஆஸ்ரம வளாகம் - தியாகராயநகர் - தெற்கு உஸ்மான் சாலையில் பேருந்து நிலையம்
அருகில் உள்ள தாமோதரன் தெரு } அனுக்ரஹா பில்டிங்.
தொடர்புக்கு: 9444383960.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அருட் பீடம் - கடலூர் மாவட்டம், திருவகீந்தபுரம் பில்லாலி தொட்டி அருகில் சொர்ண வெங்கடேச பெருமாள் ஆலயம்.
தொடர்புக்கு: 9487139059.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி சந்நிதி - சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், தெத்திகிரிபட்டி, அகத்திய நகரில் உள்ள அபய ஆஞ்சநேயர் கோயில்.
தொடர்புக்கு: 9790751803.
ஸம்வத்ஸ்ராபிஷேகம்
பூந்தமல்லியிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் நயப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு நேத்ரதாயினி அம்பாள் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் ஜூலை 10}ஆம் தேதி ஐந்தாவது ஸம்வத்ஸ்ராபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9884080543.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்
சென்னை குரோம்பேட்டை நேருநகர் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் 1530வது வார சகஸ்ரநாம பாராயணம் ஜூலை 9}ஆம் தேதி ஜோதி நகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் சந்நிதியில் மாலை 6 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு: 9841498690.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


