பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொன்மொழிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன...''

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:24 pm

சுவாமி கமலாத்மானந்தர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன...''

பொருள்: தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல் ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192

எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில் எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம் பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள். 
-ஸுதஸம்ஹிதை  2.20.45

யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில் ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் "ராமா' என்னும் சொல்லால் அழைக்கப்படுகிறது.   
-அத்யாத்ம ராமாயணம்

பிறவிக் குருடனால் பார்க்க முடியாது. எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது ஒன்றுமே தோன்றுவதில்லை. தன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன் வாழ்கிறான்.
-சாணக்கிய நீதி

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள் விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்; இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை விடுவதில்லை.
-ஸ்ரீஆதிசங்கரர்

-தியானம்,  நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால் ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் 

புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை; கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்; சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.  
-விவேக சிந்தாமணி

விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும், கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில் சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்; இதில் சந்தேகமில்லை.
-தேவி பாகவதம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.