மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நிழல் கிரகங்கள்- ரத்தினங்கள்!

ராகுபகவான்: எண்- 4, அதிதேவதை- பத்திரகாளி, கருப்பு நிறம், ஆட்டு வாகனம், கருங்கல் உலோகம், மந்தாரை மலர் பூஜைக்குரியது. அருகம்புல் சமித்து யாகத்துக்குரியது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 1:21 pm

ராகுபகவான்: எண்- 4, அதிதேவதை- பத்திரகாளி, கருப்பு நிறம், ஆட்டு வாகனம், கருங்கல் உலோகம், மந்தாரை மலர் பூஜைக்குரியது. அருகம்புல் சமித்து யாகத்துக்குரியது. நவதானியத்தில் உளுந்து, சங்கரம ஜாதி, நெடியர், சுவையில் புளிப்பு, பித்த நோய், தென்மேற்கு திக்கு ஆதிக்க முடையவர். பெண் கிரகம், அந்நிய பாஷைக்கு ஆதிக்கம் தரும், கிரக தலம் காளஹஸ்தி, நவரத்தினம் கோமேதக கல், ராகுபகவான் ஆதிக்கமுடையவர்கள் கோமேதகம், அக்கோமெரின், அம்பர் போன்ற கல் வைத்து தங்கம் அல்லது வெள்ளியில் மோதிரம் செய்து அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரக்கூடியதாகும். 

பலன்கள்:  களத்திர, புத்திர தோஷங்கள் தீரும். சர்ப்ப தோஷம் அடியோடு விலகும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பெண்கள் சகவாசத்தில் உள்ள சிக்கல்கள் தீரும்.

கேதுபகவான்:  எண்- 7, அதிதேவதை இந்திரன். சிவப்பு நிறம், சிங்க வாகனன். துருக்கல் உலோகம், செவ்வரளி மலர் பூஜைக்குரியது. தர்ப்பை சமித்து யாகத்திற்கு ஏற்றது. கொள்ளு நவதானியங்களில் பிரீதியானது. சங்கரம ஜாதி, நெடியர், சுவையில் புளிப்பு, பித்தநோய், வடமேற்கு திக்குக்கு ஆதிக்கம் வகிப்பவர், அலி கிரகம், அந்நிய பாஷை, பலவர்ண (சித்திர) வஸ்திரம் பிரீதியானது. தலம்- காளஹஸ்தி, நவரத்தினம் வைடூரியம்.

கேதுபகவானின் ஆதிக்கம் உடையவர்கள் வைடூரியம், ஓபேல், சந்திரகாந்தக்கல் ஆகிய கல் வைத்து தங்கம் அல்லது வெள்ளியில் மோதிரம் செய்து அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரக்கூடியதாகும். 

பலன்கள்:  ஞானசித்தி உண்டாகும்.  கல்வி சரளமாக அமையும். சாஸ்திர பயிற்சியில் வல்லவர் என்று பெயர் பெறுவர். குடும்பத்தில் உள்ள யாவரும் மதித்துப் போற்றுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.