பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புத்தாண்டு பூத்தது

ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டு 26.10.2014 இல் பிறந்தது. ஹிஜ்ரி பிறந்த பின்னணியை முன்னோக்கி நன்னோக்கத்தோடு வரவேற்போம் பூக்கும் புத்தாண்டை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:08 am

மு. அ. அபுல் அமீன்

ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டு 26.10.2014 இல் பிறந்தது. ஹிஜ்ரி பிறந்த பின்னணியை முன்னோக்கி நன்னோக்கத்தோடு வரவேற்போம் பூக்கும் புத்தாண்டை.

சகாப்தங்கள் சரித்திர சாதனைகளைக் கருத்தில் கொண்டு பொருத்தமாய் கணக்கிடப்படும். அரபிகளும் பொது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறும் வண்ணம் ஆண்டுகளைக் கணக்கிட்டனர். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யானை ஆண்டு என்று ஏராளமானஆண்டுகள் பழக்கத்திலும் வழக்கத்திலும் இருந்தன.

இஸ்லாம் தோன்றிய பின் இஸ்லாமியர்களுக்கென்று தனி ஆண்டு இல்லை. கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் கலீபாவின் கடிதங்களில் நாள், மாதம், ஆண்டு குறிக்கப்படாமல் இருப்பதை ஆளுநர்கள் சுட்டிக்காட்டி எந்த ஆணைகள் எந்த ஆண்டில் எழுதப்பட்டவை, எப்பொழுது நடைமுறைப் படுத்துவது என்ற தெளிவு வேண்டும். தெளிவினைத் தெரிவிப்பது ஆண்டென்று ஆலோசனை கூறினர்.

"ஆலோசனை செய்வது எனது வழிமுறை. அவசரப்படுவது சைத்தானின் வேலை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய படி கலீபா உமர்(ரலி) அவர்கள் அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டார்கள்.

சிலர் பாரசீக ஆண்டு கணக்கை மீண்டும் பின்பற்ற முன்மொழிந்தனர். இன்னொரு குழுவினர் மாநபி (ஸல்) பிறந்த நாளைச் சிறந்ததாய் செப்பும் நாம் அந்நாளிலிருந்தே ஆண்டைக் கணக்கிட இணக்கம் தெரிவித்தனர். ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ததை அடிப்படையாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிட ஆலோசனை கூறினார்கள். மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவை அடைந்ததும் மாநபி (ஸல்) அவர்களும் கல்லெடுத்து வைத்து கட்டிய முதல் தொழுகை பள்ளி கூபா பள்ளி.

"ஆகவே (நபியே) நீங்கள் ஒரு காலத்திலும் அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப நாளில் பயபக்தியுடன் அடித்தளமிட்ட பள்ளிவாசல்தான் நீங்கள் (தொழுகைக்காக) நிற்பதற்கு மிகவும் தகுதி உடையது. அதிலுள்ள மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை நேசிக்கிறான்'' என்ற குர்ஆனின் 9-108 ஆவது வசனத்தில் நயவஞ்சகன் அபூ ஆமிர் அரபு நாட்டின் தலைவனாக ஆவலுற்று கட்டிய பள்ளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழ வேண்டாம் என்றும் மதீனாவில் ஆரம்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கட்டிய குபா பள்ளியில் தொழுமாறும் அல்லாஹ் அறிவிக்கிறான். அவ்வசனத்தில் வரும் "ஆரம்பத்தில்' என்ற சொல்லும் ஆண்டின் ஆரம்பம் ஹிஜ்ரத்தை அடிப்படையாய் கொண்டு அமைவதை அனைவரும் ஆதரித்தனர்.

"மக்கள் ஆண்டு கணக்கை இணக்கமான நபி (ஸல்) அவர்கள் இறை தூதரானதிலிருந்து அல்லது அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. அவர்கள் மதீனா வந்ததிலிருந்து (ஹிஜ்ரத்) கணக்கிட்டார்கள்'' அறிவிப்பவர் - சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல் -புகாரி.

ரபியுல் அவ்வல் முதல்நாள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு 12 ஆம் நாள் மதீனாவிற்கு வந்தார்கள். ஆயினும் ஹஜ் மாதத்தில் விடுமுறை விட்டு ஹஜ் முடிந்ததும் அடுத்த முஹர்ரம் மாதத்தில் மீண்டும் வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அதனையொட்டியே முஹர்ரம் முதல்நாளை ஆண்டின் துவக்கமாக்கி ஹிஜ்ரி ஆண்டு சந்திர இயக்க கணக்கில் ஆரம்பமானது. காலம் கணித்து துவங்கும் பயணம். துவக்கிய பயணத்தில் காலத்தைக் கணித்ததே ஹிஜ்ரி ஆண்டு.

புத்தாண்டில் உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்த சத்திய மார்க்கத்தைப் பேணி நித்தமும் நித்திலமாளும் அல்லாஹ்வை வணங்கி வளமாய் வாழ்த்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.