

விதவைகள் மூன்று வகையினர். கணவன் இறந்ததால் கணவனை இழந்த விதவைகள். கணவனால் விவாகரத்து (தலாக்) செய்யப்பட்ட விதவைகள். கணவனைப் பிடிக்காமல் கணவனிடமிருந்து விவாக விலக்கு (குலா) பெற்ற விதவைகள்.
விதவைகள் எவ்வகையினராயினும் கைவிடப்பட்டு அடங்கி, ஒடுங்கி, கலங்கி கண்ணீர்விட்டு வாழ வேண்டியவர்கள் அல்லர்; இலங்கி, துலங்கி, விளங்கி வாழ வேண்டியவர்களே; விதவைகள் உதவிக்குக் கையேந்தி மெய் சோர்ந்திடாது வாழவே இஸ்லாத்தில் விதவை மறுமணம் வலியுறுத்தப்படுகிறது; நடைமுறையிலும் உள்ளது.
விதவை மறுமணத்தை மறுத்தால், கூடா நட்பு, கூடா ஒழுக்கம் கூடி விளையும் கேடுகளை ஏடுகளில் படிக்கிறோம்; ஊடகங்களில் பார்க்கிறோம்.
"மனைவிகளை விட்டு இறக்கும் உங்களில் உள்ளவர்கள் தங்கள் மனைவிகளை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி விடாது ஓராண்டு வரை உணவு, உடை முதலிய செலவுகளை வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். அவர்கள் தாமாகவே வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி திருமணம் செய்துகொண்டால் அதனால் உங்கள் மீது குற்றமில்லை'' என்ற குர்ஆனின் 2:240 ஆவது வசனத்தில் முறையான திருமணம் வலியுறுத்தப்படுகிறது. அதுவே விதவைகளின் மலர்ச்சிக்கு உறுதி.
"நீங்கள் தலாக் செய்த பெண்கள் தங்களின் தவணையை (இத்தா) முடித்து கொண்ட பின்னர் அவர்கள் விரும்பும் ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் புரிவதைத் தடுக்காதீர்கள்'' என்று எழில்மறை குர்ஆனின் 2-232} ஆவது வசனமும் விரும்பியவர்களோடு வாழ ஒழுங்கான முறையில் திருமணம் புரிய உரிய முறையில் உபதேசிக்கிறது.
இத்தா என்பது 3 மாதவிடாய் காலம்வரை தனித்திருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுவது; கர்ப்பிணிகள் பிரசவகாலம் வரை இருப்பது; இத்தா காலத்தில் விவாகரத்து செய்யப்பட்ட அவளுக்குரிய உணவு, உடை முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த விதவையை இத்தா காலத்தில் கணவனின் வாரிசுகள் கவனிக்க வேண்டும். அதன்பின் அப்பெண் விரும்பும் ஆணை முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
வாழ்ந்து வழிகாட்டி, விழி திறந்து, விழிப்புணர்வை உண்டாக்கிய உத்தம நபி (ஸல்) அவர்கள் விதவைகளை மணந்து மறுவாழ்வு கொடுத்தார்கள். அவர்களை அடியொற்றி அவர்களின் தோழர்களும் விதவைகளை மணந்தார்கள்.
நபிகளின் தோழர் ஜாபின் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முதல் விவாகம் புரிந்த இளைஞரான அவர் விதவையைத் திருமணம் செய்த காரணத்தைக் கேட்டார்கள்.
உஹது போரில் கொல்லப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒன்பது சகோதரிகளை விட்டுச் சென்றுள்ளார்கள். பருவம் எய்தா அச்சிறுமிகளைப் பராமரிக்க அவர்களைப் போன்ற பக்குவமில்லா பருவப் பெண்ணை மணப்பதைவிட விதவையை மணப்பது சிறப்பென்று நிறப்பமான விதவையைத் தேர்ந்தெடுத்ததாய் பதிலிறுத்தும் அவரின் செயலைச் செம்மல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டியதைப் பகரும் ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு புகாரியில் உள்ளது.
வளரும் பருவத்தில் குழந்தைகள் உள்ளோர் விதவையைத் திருமணம் செய்வதில் உள்ள நன்மையை நவில்கிறது ஜாபிர் (ரலி) அவர்களின் நல்லுரை.
நபி வழியில் வாழும் நாமும் விதவைகளுக்கு உதவிகள் செய்து, அவர்கள் மறுமணம் புரிந்து மலர்ச்சியுடன் வாழ வழி வகுப்போம். வல்லோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு
சிரி... சிரி...
அசத்தல்...
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

