தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலர்களை நெருக்கமாக அமைத்துத் தொடுக்கப்பெற்றுள்ள மாலையை அணிந்துள்ள அரசன் தகைமையில் இருந்து விலகிச் சென்றுவிடாமல் அறிவுடைய பெரியோர், அரசர் பிழைபடாது இருத்தற்கு மிகைப்பட்ட சிலவற்றை வறிதே செய்து காப்பர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:13 pm

தினமணி

செறிவுடைத் தார் வேந்தன் செவ்வி மாறாமல், 
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப - வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது.    (பாடல்: 323)


மலர்களை நெருக்கமாக அமைத்துத் தொடுக்கப்பெற்றுள்ள மாலையை அணிந்துள்ள அரசன் தகைமையில் இருந்து விலகிச் சென்றுவிடாமல் அறிவுடைய பெரியோர், அரசர் பிழைபடாது இருத்தற்கு மிகைப்பட்ட சிலவற்றை வறிதே செய்து காப்பர். உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு நிலாவைக் காட்டி மருட்டி, உணவு உண்ண வைக்கும் தாய்மாரைப் போலச் செயல்படுவர். அத்தகைய சமயங்களில் உண்மையானவற்றைச் சொல்லி அரசரைத் தெளிவுறுத்துதல் எளிதன்று என்பதால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.