பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
நன்மை எது, தீமை எது என்பதைப் பிரித்து அறியத் தெரியாதவர் பயனற்ற செயல்களைச் செய்யாது விலகி இருக்க மாட்டார். மூத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்.


தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர் பிறரைக்
கள்ளராச் செய்குறுவார் - (பாடல்: 310)
நன்மை எது, தீமை எது என்பதைப் பிரித்து அறியத் தெரியாதவர் பயனற்ற செயல்களைச் செய்யாது விலகி இருக்க மாட்டார். மூத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். தொடர்ந்து பயன் இல்லாதவற்றைச் செய்வார். தவறு நேராமல் தம்மைக் காத்துக்கொள்ளவும் மாட்டார். தம் தவற்றை உணர்வதற்கும், உணர்ந்து திருந்துவதற்கும் பதிலாக மற்றவர்கள் மேல் குற்றங்களைச் சுமத்துவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...