கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பெரிய வளைந்த மூங்கிலை வென்ற புருவத்தை உடையவளே!

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

தினமணி

விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,
இரும் பணை வில் வென்ற புருவத்தாய், ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து.     (பாடல்: 286)


பெரிய வளைந்த மூங்கிலை வென்ற புருவத்தை உடையவளே! தம்மை வந்து தஞ்சமாகச் சேர்ந்தவர்க்கும், உறவினர்க்கும், பசியால் வருந்தி வருபவர்க்கும் எதுவுமே செய்யாமல் அறிமுகமே இல்லாமல் வரும் புதியோர்க்கு உதவுபவர் கரிய பனை மரத்தைப் போன்றவர் ஆவார். பனை வித்து இட்டவர்க்குக் காய் காய்த்து உதவாது. பல ஆண்டுகள் கழித்து (வித்திட்டவர் இறந்த நிலையில்) மற்றவர்க்குப் பனை நுங்கைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.