சொல் புதிது - 25
பேசுவது எல்லாம் கதைக்கு ஆகாது என்று சொல்கிறார்கள். ஆனால், கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரச் சொல்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்குக்கூட வீட்டில் கலந்து பேசச் சொல்கிறார்கள். மற்றவர் கருத்தறிய கலந்து பேச வேண்டியிருக்கிறது.


பேசுவது எல்லாம் கதைக்கு ஆகாது என்று சொல்கிறார்கள். ஆனால், கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரச் சொல்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்குக்கூட வீட்டில் கலந்து பேசச் சொல்கிறார்கள். மற்றவர் கருத்தறிய கலந்து பேச வேண்டியிருக்கிறது.
ஆசிரியர் திருநாளன்று தில்லி மானெக்சா அரங்கத்தில் 100 மாணவர்கள் முன்பாகப் பிரதமர் மோடி பேசினார். 18 லட்சம் அரசு, தனியார் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மோடி, பேசவில்லை; மாணவர்களுடன் கலந்துரையாடினார். கேள்விகளுக்குப் பதில் சொன்னார். ஆனால், தென்னிந்தியப் பள்ளி மாணவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டனர். அதற்கும் மோடி இந்தியிலேயே பதில் சொன்னார். சமூக வலைதளங்களில் மோடியின் கலந்துரையாடலுக்கு வரவேற்பு கிடைத்தது. அதேவேளையில், இந்தியில் மட்டுமே பேசியதால், இந்திமொழி தெரியாத மாணவர்கள் கலந்துகொள்ள முடியாத கலந்துரையாடலாகிப் போனது. இந்தக் கலந்துரையாடலில், ""பிரதமர் ஆவது எப்படி?'' என்றும் ஒரு மாணவர் கேள்வி கேட்டார்.
தான் சொல்வதைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று இருந்த நிலையை இன்றைய அறிவியல் மாற்றி இருக்கிறது. சொல்வதைக் கேட்டுக்கொள் எனும் பழையமுறை மாறிக் கொண்டிருக்கிறது. நிகழ்ந்த ஒன்று, பார்த்தவர் பார்வையாலும் நோக்கத்தாலும் மற்றவர்க்குப் போகிறது; மற்றவர் கேட்டது இன்னொருவருக்குப் போகிறது; ஊடகம், தம் நோக்கத்திற்கேற்பவே மற்றவர்க்குச் சொல்கிறது அல்லது காட்டுகிறது. உண்மைநிலை அறியச் சொல்பவரிடம் கேள்விகள் வருகின்றன. அப்போது சொல்பவரின் நோக்கம் தெரிய வருவதோடு கேட்பவரின் நோக்கமும் தெரிய வருகிறது.
செயற்படுவதற்கு உண்மை நிலையும் நோக்க நிலையும் தெரிய வேண்டும். செயற்பட விரும்புவோர் தமக்குள் கலந்துபேசி உண்மை நிலையையும் நோக்க நிலையையும் தெரிந்துகொண்டு, தங்களது செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டியுள்ளனர்.
கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கிற முடிவுகள் மற்றவர் பங்களிப்பை மறுப்பதோடு செயற்பாடுகளிலும் முழுமையைச் சிதைக்கும். எனவே, எல்லா நிலைகளிலும் வேறு ஒருவருடன் அல்லது வேறு ஒன்றுடன் செயற்பட Interaction தேவைப்படுகிறது.
Interaction என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
க.அன்பழகன், ப.கோபி பச்சமுத்து, செ.சத்தியசீலன், டி.வி.கிருஷ்ணசாமி, துரை.ஏ. இரமணன், சி. இராமச்சந்திரன், எஸ்.சுரேஷ், கோ. மன்றவாணன், என்.ஆர். ஸத்தியமூர்த்தி, இரா.மோகனசுந்தரம் ஆகியோர்,
ப் இடைஇயல்வினை, பல்லிடைவினை, இடைநிகழ்வினை, சேரிடைச் செயல், கலந்தியல்வினை, கலப்புவினை, வினையெதிர்வினை, வினையிடைவினை, இடைவிளக்கக் குறுக்கீடு, செயலெதிர்வினை, கருத்திடை உரையாடல், கருத்திடை விளக்க உரையாடல், கருத்தாடல், இடையாடல், ஊடாடல், கருத்துப் பரிமாற்றம், இணைந்தாற்றல், தொடராடல், இடையீடு, இடைவினை, ஒருவருக்கு ஒருவர்க்கிடையே செயல்படுதல், ஒன்றுக்கு ஒன்றிடையே உள்ள செயற்பாடு, செயலெதிர்ச்செயல், எதிர்வினை, எதிர் விளைவு, பதிலுக்குப் பதில், உள்விளைவு, உள்வினை, உட்செயல்பாடு, ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு செயல்படுதல், தொடர்பேற்படுத்தல், இணைந்து செயல்படல், கருத்துப் பரிமாற்றம், கருத்தொன்றிய செய்கை ஆகிய தமிழாக்கங்களை அனுப்பியுள்ளனர்.
Interaction மனிதர்களோடு மட்டுமில்லை நாம் பயன்படுத்தும் கணினி போன்ற கருவிகளுடனும் ஊர்திகளுடனும் கூட நடைபெறுகிறது. கலை இலக்கியப் படைப்புகளுடனும் நடைபெறுகிறது. பார்க்கிற கலைகளும் படிக்கிற நூல்களும் பயன்படுத்தும் பொருள்களும் நமது செயற்பாட்டிற்கு உதவுகின்றன. இப்படிச் சமுதாய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் செயற்படத் தூண்டுகிற- உதவுகிற - செல்வாக்கு செலுத்துகின்ற Interaction என்பதைக் கலந்துரையாடல் என்று சொல்ல முடியவில்லை. Interaction மனிதர்களிடையே மட்டுமே நடைபெறுவதாக இல்லை. எனவே, கலந்து வினையாடல் என்று சொல்லலாம்.
INTERACTION - கலந்து வினையாடல்
அடுத்த வாரத் தேடல் - Payment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...