நாம் வேண்டுமானால் உரையாசிரியர்கள் விளக்கவுரை வரைவதுபோல் காரணம் கற்பிக்கலாம். அப்படி சில செய்திகள்: "அடி' என்ற தனிச்சொல், அடிப்புறம் உள்ள இந்தியப் பெருங்கடலைக் குறிக்கிறது. மேற்கில் அமைந்த அரபிக்கடல் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தால் (மும்பையிலிருந்து), உலகம் முழுதும் சுற்றிவரலாம். தமிழகத்தோடு வணிகத் தொடர்புடைய அரேபியா, நாகரிகத் தொட்டில் எகிப்து, நமையாண்ட வெள்ளையர் பூமி இங்கிலாந்து, கலை-கலாசார சிறப்புமிக்க பிரான்ஸ் தேசம், ரஷியா என்று போய்க்கொண்டே இருக்கலாம். பாரதியின் நோக்கம், இந்தியா உலக நாடுகளோடு வணிகம்-கடல்வழி வணிகம் மிகுதியாகச் செய்ய வேண்டும் என்பதே. முக்கியமாகக் "கப்பல் விடுதல்' நமக்கு வ.உ.சி.,யை நினைவுபடுத்தும்.