மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

உற்சாகம் தரும் இசை!

மனித உணர்ச்சிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்தும் ஓர் உன்னதக் கலையே இசை.

News image
Updated On :3 மே 2026, 4:03 am IST

மனித உணர்ச்சிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்தும் ஓர் உன்னதக் கலையே இசை. அதற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு பற்றிய நியூயார்கர் பத்திரிகையில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்று உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

இசையைக் கேட்டவுடன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம், கவரப்படுகிறோம் என்பதற்கு நவீன அறிவியல் ஆராய்ச்சி பதில் தந்துவிட்டது.

இசை அனைவரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகில் ஐந்து சதவீதத்தினரே இசையால் நல்ல தாக்கத்தைக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இசை அன்ஹெடோனியா என்ற நிலை இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஏன் இசை நம்மை உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கிறது என்பதற்கு நமது மரபணுவிலேயே அந்த உணர்ச்சி ஊறியிருக்கிறது என்பது ஒரு பதிலாகும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

நாற்பதனாயிரம் வருடங்களுக்கு முன்னரே புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியை மனிதன் படைத்து, வாசித்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு. அதாவது வார்த்தைகள் இல்லாத இசைகூட நம்மை உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

மாண்ட்ரீலில் உள்ள ஜடோரே சோதனைச்சாலையில் இசை ஆர்வலர்களின் மூளைகளைப் பரிசோதிக்க ஆரம்பித்தனர். மூளையின் முக்கியப் பகுதிகளில் ஒன்று, சந்தோஷமான தருணங்களில் டோபமைன் சுரக்கிறது என்று கண்டுபிடித்தனர். இது நல்ல உணர்வை நல்கும் மூளை ரசாயனம்.

தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்குமாறு சோதனையில் பங்கு கொண்டோர் கூறப்பட்டனர். என்ன ஆச்சரியம்! அவர்களின் மூளையின் சந்தோஷம் தரும் பகுதி நன்கு ஊக்குவிக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டனர்.

அமிபெல்ஃபி என்ற பெண்மணி இசை ஆராய்ச்சியில் முதன்மையானவர். இவரிமிùஸளரி பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவர். ""இசையானது இன்பம் பயக்கும் ஒன்று என்பதை அறிவியல் ஆய்வுகள் மறுக்க முடியாதபடி நிறுவுகின்றன'' என்கிறார் இவர்.

ஆகவே கவலையா, மனச்சோர்வா, உடல்நலப் பாதிப்பா எதனாலும் சரி, உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்க ஆரம்பித்தால், நீங்கள் உணர்வூக்கம் பெற்று உற்சாகம் அடைவீர்கள். மூளையில் டோபமைன் அதிகமாகச் சுரக்கும், இன்ப உணர்ச்சியைத் தரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.