தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பயணங்களுக்கான எரிபொருள்

'முதல் இடம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக முத்திரை பதித்தவர் ஜான் பிரிட்டோ.

News image
Updated On :15 மார்ச் 2026, 1:37 pm

'முதல் இடம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக முத்திரை பதித்தவர் ஜான் பிரிட்டோ. தற்போது 'இளமி' படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த கலை இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

அவரிடம் பேசும்போது, ''அங்கீகாரம் என்பது ஒரு கலைஞனுக்கு முக்கியமானது. அந்த அங்கீகாரத்தை நல்ல உழைப்புக்குக் கொடுத்த தமிழக அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா வாய்ப்பு என்பது எனக்குத் தானாக தேடி வந்தது. முதல் படமே ஒரு ஹாலிவுட் வாய்ப்பு. என் ஆர்ட் திறமையைப் புரிந்துகொண்டு வாய்ப்பு தந்தார்கள்.

தோட்டாதரணியிடம் உதவியாளராக வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் 50-க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டேன். 'இளமி' படத்தின் களம் என்பது 17-ஆம் நூற்றாண்டு கதை. அதை எதார்த்தமாகக் கொண்டு வந்தது பேசப்பட்டது. அதற்குத்தான் இப்போது விருது.

சுதந்திரப் போராட்ட வீரர் தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கையைக் களமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். அது மிகவும் சவாலாக உள்ளது. அந்தப் பணியில் முழுமையாக இறங்கியிருக்கிறேன்.

சிறிய படங்கள் தொடங்கி பெரிய படங்கள் வரைக்கும் ஒவ்வொரு டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஒவ்வொரு படங்களில் பணியாற்றி, இந்த நாள் வரைக்கும் சினிமா துறையில் உச்சத்தில் வர முயற்சிக்கிற எனக்கு இந்த விருது பெரும் உற்சாக டானிக்.

நான் ஏற்கெனவே விருது வாங்குவேன் என்று பத்து வருடத்துக்கு முன்பாகவே கனவோடும் என்னுடைய முயற்சியினுடைய வெற்றியின் உழைப்போடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இது இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.