மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திரைக் கதிர்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள 'ஜல்சா' என்ற பங்களாவில் வசித்து வருகிறார்.

News image
Updated On :7 மார்ச் 2026, 10:48 pm

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள 'ஜல்சா' என்ற பங்களாவில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் 'ஜல்சா' பங்களாவுக்கு வருவது வழக்கம்.

தான் வசிக்கும் ஜல்சா வீடு குறித்தும், ரசிகர்களைச் சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாங்கள் வசிக்கும் ஜல்சா வீடு அன்பின் அடையாளம். உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து எனக்காக ஒதுக்கும் அந்தச் சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும் ஆசிர்வாதங்களும் எனக்கு கடவுள் வருகை போன்ற உணர்வைத் தருகின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி, என்னை வந்து சந்திப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசுகையில், 'திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கிறேன். பள்ளி ,கல்லூரி நாள்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாள்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும். இதைப் பின்பற்றுங்கள்' என்றிருக்கிறார்.

தொடர்ந்து, 'மீடியா என்பதை தள்ளி வைத்து விட்டு, உங்களது 'பிரீ டைம்'ல் என்ன செய்வீர்கள்?' என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு தனுஷ், 'நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்

களோடு விளையாடுவேன். இடைவேளை அபூர்வமாகத்தான் கிடைக்கும்... கிடைத்தால் இது மூன்று தான்' என்று பதிலளித்திருக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், 'சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக விஜய்யை எனக்குப் பிடிக்கும். தியேட்டருக்குச் செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம்' என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்துப் பேசிய அவர், 'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும்!' என்று கூறியிருக்கிறார்.

'காந்தாரா' படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கெளடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது. 'திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒரு முறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம்.

பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்து கொள்ளும் போது, அவர்களின் விடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுகின்றன. மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்த பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்' எனப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.