வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சின்னத்திரை! ஆடுகளம் நேர மாற்றம் ஏன்?

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோயில் ஒன்றில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2026, 4:10 am IST

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோயில் ஒன்றில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடர்களிலும், சில படங்களிலும் நடித்து வந்த சாரா, ஒருகட்டத்தில் சொந்தமாக மேக் அப் ஸ்டூடியோ தொடங்கி, செலிபிரிட்டிகள் மேக் அப், மேக் அப் பயிற்சி வகுப்பு என பிசியாக இருந்தவர்.

'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் விக்னேஷ். கடந்த சில வருடங்களாக சீரியல் பக்கமும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'கனா கண்டேனடி' சீரியலில் வில்லனாக நடித்து வருகிறார்.

அது குறித்து பேசியவர், 'நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் எல்லாரும் என்னை 'ரொம்ப சாஃப்ட், இன்னொசன்ட், நல்லவன்' என்றுதான் சொல்வார்கள். ஆனால், எனக்குள் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்களாக இருந்தது. எனவே 'கனா கண்டேனடி' சீரியலில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறேன்.' என்கிறார்.

பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயத்ரி ஜெயராமன், டெல்னா டேவிஸ், சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோர் நடிக்க சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது 'ஆடுகளம்' தொடர்.

பிரைம் டைம் ஒதுக்கப்பட்டு நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனால், சமீபமாக தொடரின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனவே தொடரின் ஒளிபரப்பு நேரத்தை பகல் ஸ்லாட்டுக்கு மாற்றியிருக்கிறது சேனல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.