ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வரைச் சந்திக்க முடியவில்லையே! சின்னதிரை நிர்வாகிகளின் ஆதங்கம்!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதல்வர் சி.ஜோசப் விஜயை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கின்றனர் சின்ன திரை சங்க நிர்வாகிகள்.

Published On :12 ஜூலை 2026, 4:14 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதல்வர் சி.ஜோசப் விஜயை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கின்றனர் சின்ன திரை சங்க நிர்வாகிகள்.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் முதல்வராகப் பதவி ஏற்ற உடனேயே தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சீரியல் தயாரிப்பாளர் சங்கம் முதலான சில சங்கங்களின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இத்தனைக்கும் விஜய் கட்சியைத் தொடங்கியது முதல் தேர்தல் வரை திரைத்துறையில் அவருக்குப் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், வெற்றிக்குப் பின்னர் வரிசையாக வாழ்த்துச் சொன்னார்கள். பலர் நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தனர்.இந்தப் பின்னணியில் சின்ன திரை நடிகர் சங்க நிர்வாகிகளும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல நேரம் கேட்டு கடிதம் கொடுத்தார்களாம். இதுவரை முதல்வர் அலுவலகத் தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.